ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப் பகுதியில் பறவைகள் குறித்த தகவல் சேகரிக்கும் பணி தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சாம்பல் நிற அணில் சரணாலயப் பகுதியில் முதல் முறையாக பறவைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இப் பணி செவ்வாய்கிழமை நிறைவு அடையும்.

News image
Updated On :22 டிசம்பர் 2012, 11:37 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சாம்பல் நிற அணில் சரணாலயப் பகுதியில் முதல் முறையாக பறவைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இப் பணி செவ்வாய்கிழமை நிறைவு அடையும்.

தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினருகான பயிற்சி சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. இதில் பறவைகள் ஆர்வலர் பெங்களூர் சேர்ந்த வங்கி மேலாளர் சந்திரசேகரன் மற்றும் மதுரை டாக்டர் பத்ரிநாதன் ஆகியோர் கருத்துரையாற்றினர். அவர்கள் பேசுகையில் கூறியதாவது:சில வகை பறவைகள், சில குறிப்பிட்ட வாழிடத்தில் தான் இருக்கும். அப் பகுதியில் உள்ள மழையின் அளவு, காடுகளின் அடர்த்தி, வன வளம் உள்ளிட்டவையைப் பொறுத்தே பறவைகளின் வாழிடம் உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை கன்னியாகுமரி முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையுள்ளது. இப் பகுதியில் 508 வகை பறவைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இவற்றில் மலைமங்கை அல்லது மலைமுங்கான், காடுமுழங்கி, நீலகிரி மரப்புற உள்ளிட்ட 18 வகையான பறவை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. இவை குறித்து கணக்கெடுப்பு நடத்தி, இவற்றிற்கான வாழிடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதே இந்த தகவல் திரட்டும் பணியின் நோக்கம்.

இதில் மெட்ராஸ் நேச்சுரல் சொசைட்டி, சென்னை ஒயில்டு டிரஸ்ட், ஈரோட்டில் உள்ள சத்தியமங்கலம் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அசோஸியேசன் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 10 குழுக்களாக இந்த வனப் பகுதியில் கணக்கெடுப்புப் பணியை தொடங்குகிறார்கள். ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் இருப்பார்கள்.

திங்கள்கிழமை மாலை 8 குழுக்கள் இங்கு திரும்புவார்கள். இரு குழுக்கள் தூரம் அதிகமாக இருப்பதால் அவர்கள் செவ்வாய்கிழமை இங்கு திரும்புவார்கள்.

இதன் பின்னர் பறவைகள் வாழுவதற்கான இடங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும், அழிந்து வரும் பறவை இனத்தை காப்பாற்றுவதற்கு வனத்துறை என்ன செய்யலாம் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின பாதுகாவலர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.