ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு; ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கலை 7.05 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெற்று, ஆழ்வார்களை எதிர்கொண்டு ஸ்ரீபெரிய பெருமாள் முதலிலும் ஸ்ரீஆண்டாள்-ரெங்கமன்னார் அடுத்தும்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீஆண்டாள்-ரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாளை தரிசித்துப் பரவசம் அடைந்தனர்.
அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீபெரிய பெருமாள் தோளுக்கினியானிலும், ஸ்ரீஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியிலும் வேத விண்ணப்பமாகி மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடைபெற்றது.
கலை 7.05 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெற்று, ஆழ்வார்களை எதிர்கொண்டு ஸ்ரீபெரிய பெருமாள் முதலிலும் ஸ்ரீஆண்டாள்-ரெங்கமன்னார் அடுத்தும் வைகுந்த வாசல் வழியே வெளியே வந்தனர். இதனையடுத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல், நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன், கோயில் செயல் அலுவலர் ச.சுப்பிரமணியம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியே கோவிந்தா, கோபாலா என கோஷங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் வந்தனர். பின்னர் சுவாமிகள் மாடவீதி, கந்தாடை வீதிகளில் எழுந்தருளி ராப்பத்து மண்டபம் சேர்ந்தனர். ஆங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் நடைபெற்று, திருவாய்மொழித் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...