ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவிலி. புதிய பஸ் நிலையம் அமைக்க முதல்வரிடம் நேரில் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூரின் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை திங்கள்கிழமை நேரில் சந்தித்து தொகுதி

News image
Updated On :25 டிசம்பர் 2012, 4:02 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரின் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை திங்கள்கிழமை நேரில் சந்தித்து தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் வலியுறுத்தி மனு அளித்தார்.

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள், கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுயில் நிறைவேற்ற வேண்டிய முக்கிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிடம் பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. அளித்த மனு விவரம்:

ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள மக்கள் தொகை மற்றும் வாகனங்களைக் கருத்தில் கொண்டு நகரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டது. தற்போது நகரின் மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் பெருக்கத்தால் அனைத்து தரப்பினருக்கும் பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் இன்னல் ஏற்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர்-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் ஏராளமான வாகனங்கள் கேரளா மாநிலத்திற்கு இந்த வழியே சென்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு முக்கிய சுற்றுலா மற்றும் கோயில் நகரம். இதனால் ஏராளமானோர் இங்கு தினமும் வந்து செல்கின்றனர். நகர் மக்களின் அத்தியாவசிய அவசர தேவையைக் கருத்தில் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு புதியதாக ஒரு பேருந்து நிலையத்தை நகரின் வடக்கு பகுதியிலோ, தெற்கு பகுதியிலோ அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பேருந்து நிலையம் வடக்கு அல்லது தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டால், புறவழிச் சாலை வழியே வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். வத்திராயிருப்பை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு நூற்பு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளவக்கல் அணையிலிருந்து அனைத்து கண்மாய்களுக்கும் தனித் தனியாக வரத்துக் கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தார்.

மேலும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் பசுமை வீடுகள் திட்டத்தில் ஒரு சில இடங்களில் முன்னூறு சதுர அடிக்கு கூடுதலாக கட்டப்படும் வீடுகளுக்கு, அரசு நிதி வழங்க மறுப்பது தொடர்பாக முதல்வரிடம் எடுத்துக் கூறப்பட்டது. அரசு வழங்கும் பணம் போக கூடுதலாக பயனாளிகள் செலவு செய்து கட்டினால் அந்த பயனாளிகளுக்கு அரசின் முழுத் தொகையும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகை மிகக் குறைவாக உள்ளது. இதனால் நிலம் கையகப்படுத்தி இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் உள்ள பல்வேறு நெருக்கடிகளை சுட்டிக்காட்டியபோது, இது குறித்து உடனே விசாரணை செய்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் உறுதியளித்ததாக பொன்னுப்பாண்டியன் எம்.எம்.ஏ. தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.