ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் காதல் திருமணமான 8 மாதத்தில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண் 8 மாதத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :25 டிசம்பர் 2012, 4:54 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண் 8 மாதத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் கீழ் பக்கம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வைரமணி. இவரது மனைவி பாப்பாத்தி (46). இவர்களின் மகள் மேகலா (19).

மேகலா கடந்த 8 மாதத்திற்கு முன்பு இதே இடத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவருடன் நெருக்கமாக பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது 2 பவுன் தங்க சங்கிலி அணிந்து சென்றுள்ளார்.

இவர்களது திருமணம் மேகலாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்குப் பிடிக்கவில்லை. பின்னர் ஊர் பெரியவர்கள் பேசி,சமாதனம் செய்து குடும்பத்தாருடன் சேர்த்து வைத்துள்ளார்கள். 5 மாதத்திற்கு முன்னர் மேகலா கர்ப்பம் அடைந்துள்ளார். இவரை ஆத்துக்கடை தெருவில் உள்ள சரோஜா கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்கள். இதில் மன வேதனையில் இருந்த மேகலா கடந்த 1 மாதத்திற்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளிக்க முயற்சித்தாராம். அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினார்களாம்.

திங்கள்கிழமை இரவு மேகலா வீட்டில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டாராம். இதில் காயமுற்ற அவரை, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பாப்பாத்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல் துணை கண்கணிப்பாளர் எஸ்.சக்திவேல் இச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.