ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவிலி. அருகே நீரில் மூழ்கி இளைஞர் சாவு

அங்குள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த நீரில் சோட்டு (எ) ராஜூவும், சபரிமலையும் குளித்துள்ளனர்.

News image
Updated On :26 டிசம்பர் 2012, 4:34 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டி, வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சோட்டு (எ) ராஜூ (35), இதே இடத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சபரிமலை, லட்சுமிநாராயணபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் காளீஸ்வரன். இவர் மூவரும் மது அருந்திவிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பந்தப்பாறைக்கு சென்றுள்ளார்கள். அங்குள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த நீரில் சோட்டு (எ) ராஜூவும், சபரிமலையும் குளித்துள்ளனர். சபரிமலை குளித்துவிட்டு திரும்பிவிட்டார். ஆனால் சோட்டு (எ) ராஜூ திரும்பவில்லை. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு, தீயணைப்புப் படையினர் செவ்வாய்கிழமை இரவு வரை தேடியும் சோட்டு (எ) ராஜூவின் உடல் மீட்கப்படவில்லை.  புதன்கிழமை மீண்டு தேடும் பணி நடைபெற்று, சோட்டு (எ) ராஜூவின் சடலம் மீட்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்தவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.