ஸ்ரீவிலி. அருகே நீரில் மூழ்கி இளைஞர் சாவு
அங்குள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த நீரில் சோட்டு (எ) ராஜூவும், சபரிமலையும் குளித்துள்ளனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டி, வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சோட்டு (எ) ராஜூ (35), இதே இடத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சபரிமலை, லட்சுமிநாராயணபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் காளீஸ்வரன். இவர் மூவரும் மது அருந்திவிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பந்தப்பாறைக்கு சென்றுள்ளார்கள். அங்குள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த நீரில் சோட்டு (எ) ராஜூவும், சபரிமலையும் குளித்துள்ளனர். சபரிமலை குளித்துவிட்டு திரும்பிவிட்டார். ஆனால் சோட்டு (எ) ராஜூ திரும்பவில்லை. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு, தீயணைப்புப் படையினர் செவ்வாய்கிழமை இரவு வரை தேடியும் சோட்டு (எ) ராஜூவின் உடல் மீட்கப்படவில்லை. புதன்கிழமை மீண்டு தேடும் பணி நடைபெற்று, சோட்டு (எ) ராஜூவின் சடலம் மீட்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்தவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...