ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவிலி.யில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

News image
Updated On :26 டிசம்பர் 2012, 4:37 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி தெருவைச் சேர்ந்தவர் கருத்தக்காளை நாடார் மகன் காளிராஜ் (37). இவர் ஆராய்ச்சிபட்டி நாடார் உறவின் முறைக்குச் சொந்தமான இடத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு. இன்று பொட்டல்பட்டியில் உள்ள தனது சகோதரியை பார்க்க காளிராஜ் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். மடவார்வளாகத்தை அடுத்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், காளிராஜ் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், காளிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.