பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவபொம்மையை எரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:
10 நிமிடங்களுக்கு மேல் பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். அவருக்கு மட்டுமல்ல அனைத்து மாநில முதல்வர்களுக்கும் 10 நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டதாகவும், யாரையும் அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
ஆனால், தில்லியில் முதல்வரை அவமதித்ததாக அதிமுகவினர் சிலர் பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவபொம்மை எரித்ததாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியதுஇச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கிக்கு வெள்ளிக்கிழமை (டிச. 28) மாலை கடிதம் எழுதியுள்ளேன். எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

