பிரதமர் உருவ பொம்மை எரிக்க முயன்ற 3 அ.தி.மு.க.வினர் கைது
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிமன்ற கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.ராமச்சந்திராபுரம்,


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவிலில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மூன்று அ.தி.மு.க.வினரை போலீஸார் கைது செய்தனர்.
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிமன்ற கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.ராமச்சந்திராபுரம், ஜெ.ஜெ.நகர் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமராஜ், வன்னியம்பட்டி வழக்குரைஞர் பாலதண்டாயுதம், சுந்தரபாண்டியம் ராமர் ஆகியோர் திங்கள்கிழமை இரவு கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தத்தில் பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். உருவ பொம்மைக்கு தீ வைத்த உடன் போலீஸார் விரைந்து வந்து தீயை அணைத்து, மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...