பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

உடுமலை அருகே விபத்து: 2 பேர் சாவு; 20 பேர் காயம்

உடுமலை, பிப். 11:   உடுமலை அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 6 குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர். கோவையை அடுத்துள்ள சின்னாம்பதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் 30 ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:07 pm

வி.கே. ராஜமா​ணிக்கம்

உடுமலை, பிப். 11:   உடுமலை அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 6 குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோவையை அடுத்துள்ள சின்னாம்பதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் 30 பேர் தை பூசத்தையொட்டி வேன் ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு பழனி சென்றனர். அங்கு தரிசனம் செய்து விட்டு சனிக்கிழமை இரவு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை ஓட்டுநர் சிவா ஓட்டி வந்தார்.

 உடுமலை அருகே மடத்துக்குளம்-கணியூர் சாலையில் உள்ள செக்கான் ஓடை அருகே வந்தபோது நிலைகுலைந்த வேன், அங்குள்ள பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குளானது. இதில் பயணித்த 30 பேரும் வேனுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். அருகில் இருந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உடுமலை, தாராபுரம், பல்லடம், பழனி ஆகிய ஊர்களில் இருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவ் விபத்தில் சின்னாம்பதி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த பொன்னான் (50), சின்னத்தம்பி (52) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 6 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

 தகவலறிந்த திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், உடுமலை டிஎஸ்பி சு.செந்தில் ஆகியோர் சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.