பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நீதிமன்றக் காவலில் பாமக முன்னாள் செயலர் மரணம்: பாமகவினர் சாலைமறியல்

அரக்கோணம், ஜன.3: அரக்கோணம் நகரின் முன்னாள் பாமக செயலர் கோவிந்தன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரு வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உடல்நல

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:26 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம், ஜன.3: அரக்கோணம் நகரின் முன்னாள் பாமக செயலர் கோவிந்தன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரு வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவே அவர் அரக்கோணம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.

இதைக் கேள்விப்பட்டதும், பாமக நிர்வாகிகள், நகரச் செயலர் சரவணன் தலைமையில் மருத்துவமனை முன் குவிந்தனர். போலீசார் பொய் வழக்கு போட்டு அவரைத் துன்புறுத்தியதாலும், மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்றும் கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.