பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூருக்கு மின்கம்பங்கள் ஏற்றிச் சென்ற லாரிகள் பண்ருட்டியில் சிறைப்பிடிப்பு

பண்ருட்டி, ஜன.7: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மின் தொகுப்பில் இருந்து, கடலூர் நோக்கி மின்கம்பங்கள் மின் சாதனங்களை ஏற்றிச் சென்ற லாரிகளை பண்ருட்டியில் பொதுமக்கள் வழிமறித்தனர். தங்கள் பகுதியில் சில நாட்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:30 pm

சீனிவாசன்

பண்ருட்டி, ஜன.7: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மின் தொகுப்பில் இருந்து, கடலூர் நோக்கி மின்கம்பங்கள் மின் சாதனங்களை ஏற்றிச் சென்ற லாரிகளை பண்ருட்டியில் பொதுமக்கள் வழிமறித்தனர். தங்கள் பகுதியில் சில நாட்களாகவே மின் விநியோகம் சரி செய்யப்படாத நிலையில், மின் சாதனங்கள் கடலூருக்குக் கொண்டு செல்லப்படுவதை அவர்கள் எதிர்த்தனர்.

புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் படிப்படியாக மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடலூரைப் போல் பண்ருட்டியிலும் மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் பகுதியைப் புறக்கணித்துவிட்டு கடலூரை மட்டும் கவனிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.