ராமநாதபுரம், ஜூலை.3: ராமநாதபுரம் அருகே பரமக்குடியைச் சேர்ந்த சோனைமுத்து என்பவரிடம் செல்போன் மூலம் நூதன முறையில் ரூ 9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்தவர் சோனைமுத்து(42). இவர் குவைத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளதாக செல்போனில் எஸ்எம்எஸ் வந்துள்ளது. அந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு பேசியபோது லண்டனைச் சேர்ந்த மார்க்கஸ் ஒயிட்டும், மும்பையைச் சேர்ந்த ரோஹிதாவும் ரூ 9 லட்சம் பணம் கட்டுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து ஐசிஐசிஐ வங்கியில் மெகா ரிவர் சேல்ஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் சோனைமுத்து ரூ 9 லட்சம் பணம் கட்டியுள்ளார். மேலும் ரூ 5 லட்சம் பணம் கட்டும்படி கூறியதால் சந்தேகமடைந்த சோனைமுத்துவின் மனைவி முத்துலட்சுமி இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மார்க்கஸ் ஒயிட், ரோஹிதா ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

