எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அம்பையில் கடசல் தொழிலாளி மர்மச் சாவு

அம்பாசமுத்திரம், ஜூலை 14: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மர்மமான முறையில் தொழிலாளி இறந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தையை ச

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:22 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், ஜூலை 14: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மர்மமான முறையில் தொழிலாளி இறந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தையை சேர்ந்த சொர்ணம் மகன் ஐயப்பன் (35). கடசல் தொழிலாளியான இவர் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் வலது கண்ணில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை.

தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சி. சுரேஷ்குமார் ஐயப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதில் ஐயப்பன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.