யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த திமுகவினர் கைது

சேலம், ஜூலை 27 : சேலம் அங்கம்மாள் காலனியில் பாதிக்கப்பட்ட மக்கள் இருதினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியரை சந்தத்து வீரபாண்டி ஆறுமுகத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மனு கொடுத்தனர். அந்த மனுவில்,

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:37 pm

தங்கராஜா

சேலம், ஜூலை 27 : சேலம் அங்கம்மாள் காலனியில் பாதிக்கப்பட்ட மக்கள் இருதினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியரை சந்தத்து வீரபாண்டி ஆறுமுகத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மனு கொடுத்தனர். அந்த மனுவில், இன்னும் வீரபாண்டி ஆறுமுகம் மூலமான அச்சுறுத்தல் நீங்கவில்லை என்பதால் அவரை சேலம் மாவட்டத்துக்குள் அனுமதிக்க கூடாது என்றும், பாதிக்கப்பட்ட தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

அதற்கு பதிலாக, திமுகவினர் இன்று வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஆதரவாக அவரை சேலம் மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுப்பதாக அறிவித்திருந்தனர்.மேலும், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து மனு கொடுப்பதாக இருந்தனர். தகவல் அறிந்த போலிஸார் மனு கொடுக்க வந்த 33 திமுகவினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் முன்னரே கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.