திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஐ.பெரியசாமியிடம் போலீசார் விசாரணை

திண்டுக்கல், ஜூன் 4: திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். திண்டுக்கல்லை அடுத்த பூம்பூர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இ

Updated On :20 செப்டம்பர் 2012, 12:03 am

திண்டுக்கல், ஜூன் 4: திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல்லை அடுத்த பூம்பூர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைக்குப் பின்னர் அவர் திண்டுக்கல் - நிலக்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகத் தெரியவருகிறது.

முன்னதாக இரு தினங்களுக்கு முன்னர் திமுகவின் பி.சி.முரளிதரனிடம் போலீஸார் பூம்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி அவரை நிலக்கோட்டை ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அனுராதா உத்தரவின் பேரில் அவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், திண்டுக்கல் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இருப்பினும் பெரியசாமியிடம் எது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்ற தகவலை போலீஸார் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.