பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முல்லைப் பெரியாறு அணைக்கு சிமின்ட் லாரிகள் செல்ல கேரளம் அனுமதி

கம்பம், ஜூன் 15: முல்லைப் பெரியாறு அணையில் துளைகளை அடைக்கத் தேவையான சிமிண்ட் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கு கேரளம் அனுமதி அளித்துள்ளது. இன்று கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் இதற்கான உத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:14 am

அறிவழகன்

கம்பம், ஜூன் 15: முல்லைப் பெரியாறு அணையில் துளைகளை அடைக்கத் தேவையான சிமிண்ட் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கு கேரளம் அனுமதி அளித்துள்ளது. இன்று கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னதாக, கேரளாவில் பருவ மழை பெய்யத் தொடங்கியதால், விரைவில் அணையில் துளைகளை மூட வேண்டும் என்று தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சுற்றுச் சூழல் காரணங்களைக் கூறி, முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு சிமிண்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் போராட்டம் வெடிக்கவே, ஒரு லாரியை மட்டும் அனுமதித்தனர்.

இந்த நிலையில், கேரள அரசின் போக்கைக் கண்டித்து நாளை வைகோ தலைமையில் கம்பத்தில் கண்டனப் போராட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிலையில் கேரள அரசு சாதகமாக உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நாளை காலை சிமின்ட் மூட்டைகளைச் சுமந்துகொண்டு லாரிகள் முல்லைப் பெரியாறு வனப்பகுதிக்குள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நாளை காலை அறிவிக்கப்பட்டிருந்த வைகோவின் ஆர்ப்பாட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்ததுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.