தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவு தொடங்க வேண்டும்: தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

சேலம், ஜூன் 24: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவு தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  சங்கத்தின் மாநில பொது
Updated on
1 min read

சேலம், ஜூன் 24: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவு தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

 சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ம.அரியநாயகம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் அ.நல்லப்பன் சங்கச் செயல்பாடுகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவு தொடங்கப்பட வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசு தொழிற்கல்வி மேம்பாட்டுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கீடு செய்கிறது. அதில் தமிழக அரசின் பங்குத் தொகையைப் பெற்று தொழிற்கல்வியை மேம்படுத்த வேண்டும்.

 மத்திய அரசு ஊழியர்களுக்கு இருப்பதைப் போலவே 20 ஆண்டுகள் பணியாற்றினால் முழு ஓய்வூதியம் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

 தொழிற்கல்வி ஆசிரியர்களில் 75 சதவீதம் பேர் உயர் கல்வித் தகுதியைப் பெற்றுவிட்டனர். எனவே இனி தொழிற்கல்வி ஆசிரியர்களை மேல்நிலைப் பள்ளி முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர்கள் என்று பெயர் மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 மாநிலப் பொருளாளர் எஸ்.நேரு, அமைப்புச் செயலர் கே.விவேகானந்தன், தலைமை நிலையச் செயலர் ஆர்.முருகேசன், மாவட்டத் தலைவர் கே.சி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com