பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மயிலம் அருகே குடும்பத் தகராறில் விவசாயி படுகொலை

திண்டிவனம், மார்ச் 6: மயிலம் அருகே நிலத்தில் விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டிவனம் - மயிலம் அருகே நெடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு 4 மகன்கள்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:35 am

சீனிவாசன்

திண்டிவனம், மார்ச் 6: மயிலம் அருகே நிலத்தில் விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டிவனம் - மயிலம் அருகே நெடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு 4 மகன்கள். இவர்களில் ஒரு மகனான ஞானமூர்த்தி (வயது 55)க்கும் இவரின் சகோதரர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், 5 வருடங்களுக்கு முன் ஞானமூர்த்தியின் மகன் ஹரிஹரன், ஞானமூர்த்தியின் தம்பி கிருஷ்ணமூர்த்தியால் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தியும் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை வயலுக்குச் சென்ற ஞானமூர்த்தி நிலத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.அவருடைய உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தன. கழுத்தில் கல்லால் அடித்து காயம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இன்று காலை வயலுக்குச் சென்ற தந்தை ஜெயராமன் இதனைப் பார்த்து, உடனே விக்கிரவாண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து ஞானமூர்த்தியின் உடல் கைப்பற்றப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குg கொண்டு செல்லப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக அண்ணன் சுச்ந்தரமூர்த்தி, மைத்துனர் ஹரிதாஸ் மற்றும் அவர் மகன்கள் மகேஷ், சசி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.