வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பின்னலாடை உற்பத்தியில் ரைசிங் கட்டணம் 30% உயர்வு

திருப்பூர், மே. 1: திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியில் சார்பு தொழிலான ஜாப் ஒர்க் தொழிலில் 30 சதவீதம் ரைசிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  திருப்பூர் ரைசிங் சங்கத் தலைவர் எம்.வி. ராமசாமி வெளியிட்ட அறிக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:02 am

ஷேக் அப்துல்காதர்

திருப்பூர், மே. 1: திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியில் சார்பு தொழிலான ஜாப் ஒர்க் தொழிலில் 30 சதவீதம் ரைசிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
திருப்பூர் ரைசிங் சங்கத் தலைவர் எம்.வி. ராமசாமி வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் பனியன் உற்பத்தியில் நிட்டிங், டையிங், பேடிங், டிரையர், ஸ்டெண்டர், டியூப்லர் ஹீட் செட்டிங், காம்பாக்டிங், ரைசிங், சூடிங், கம்ப்யூட்டர் எம்பிராயட்ரி, கட்டிங், ஸ்டிச்சிங், செக்கிங், பேக்கிங் என 12 க்கும் அதிகமான சார்பு தொழில்கள் உள்ளன. நூல் வாங்குவதில் தொடங்கி இறுதியாக பேக்கிங் செய்து அனுப்புவது வரை பல்வேறு சார்பு தொழில்களை கடந்து பின்னலாடைகள் உற்பத்தியாகின்றன. 
ஜாப் ஒர்க் எனப்படும் இதுபோன்ற சார்பு தொழில் நிறுவனங்கள் திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பெரும்பாலும் ஜாப் ஒர்க் தொழில் செய்கின்றனர். இதில் ஒரு பிரிவாக விளங்கும் ரைசிங் தொழில்துறையினர் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியில் தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்கும் விதத்தில் தங்கள் தொழிலுக்கான கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தி மே 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆர்டர்கள் எதுவாக இருந்தாலும் திருப்பூரில் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மூலம் எந்த நேரத்திலும் எந்த அளவுகளிலும் எத்தனை ஏண்ணிக்கை எனினும் உடனடியாக பின்னலாடைகளை உற்பத்தி செய்து கொடுக்க முடியும். அந்த வகையில் நவீன இறுக்குமதி இயந்திரகளை கொண்டு பின்னலாடைகளை விரைவாகவும், தரமாகவும் உற்பத்தி செய்து கொடுக்கும் திறமையை தங்களுடைய கடுமையான உழைப்பு, அனுபவங்கள் மூலம் தொழில்துறையினர் பெற்றுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் பல்வேறு சிக்கல்களையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறது. வெளிநாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, பஞ்சு ஏற்றுமதியினால் நூல் விலை உயர்வு, மின்தடை போன்ற பல்வேறு காரணங்களால் பின்னலாடை தொழில் சோதனைகளை சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் முதுகெலும்பாக திகழும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் தடுமாறி நிற்கின்றன.
இத்தொழிலை சேர்ந்த 60 சதவீதத்தினர் நலிந்த நிலையில் உள்ளனர். தொழிலை பாதுகாக்கவும், மேலும் நலிந்து விடாமல் இருக்கவும் ரைசிங் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி மே 1 - இன்று முதல் ரைசிங் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்துவது என்றும், ஆர்டர் தரும் நிறுவனங்கள் 15 தினங்களுக்குள் நிலுவை தொகையினை செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.