எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பரிசு விழுந்திருப்பதாக தொலைபேசியில் கூறி பண மோசடி: போலீஸார் எச்சரிக்கை

திருப்பூர், மே 6: திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பரிசு விழுந்திருப்பதாக  தொலைபேசியில் கூறி இருவரிடம் இருந்து பணம் பறித்த மோசடி நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற மோசடி அழைப்புகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:08 am

ஷேக் அப்துல்காதர்

திருப்பூர், மே 6: திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பரிசு விழுந்திருப்பதாக  தொலைபேசியில் கூறி இருவரிடம் இருந்து பணம் பறித்த மோசடி நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற மோசடி அழைப்புகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் சரகத்தை சேர்ந்த பருக்கான், ஆனந்த் ஆகியோருக்கு 923068807177 மற்றும் 92308810900 என்ற தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பு வந்தது. உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு லட்சம் பரிசு விழுந்திருப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்ள குமார்திரிபாதி என்பவரின் எஸ்.பி.ஐ வங்கி கணக்கு எண் 318573447755 ல் ரூ 18 ஆயிரம் பணம் உடனடியாக செலுத்தவேண்டும் என தெரிவித்தனர்.

அதை நம்பிய இருவரும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினர். அதே நபர் மீண்டும் தொடர்புகொண்டு டிஸ் டிவி கணக்கில் ரீசார்ஜ் செய்ய ரூ 1000 செலுத்தவேண்டுமென தெரிவித்தனர், அதையும் இருவரும் செலுத்தியுள்ளனர். ஆனால் பரிசு கிடைக்கவில்லை என்பதால் இருவரும் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

விசாரணையில் மேற்கண்ட 2 தொலைபேசி எண்களும் பாகிஸ்தானை சேர்ந்த எண்கள் என்பது தெரியவந்துள்ளது. இது மாதிரியான ஏமாற்று கும்பல் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற வெளிநாடுகளில் இருந்து மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி மற்றும் அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டால் அதனை நம்பவேண்டாம்.

அதுமாதிரியான அழைப்பு வந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது போன்ற குற்றவாளிகள் பாகிஸ்தான், நைஜிரியா போன்ற நாடுகளில் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் இருக்கும், அவர்களிடம் இருந்து கொண்டு இழந்த பணத்தை மீட்பது என்பது மிக சவாலான விஷயம்.

குற்றவாளிகளை பிடிக்க இன்டர்போல் போன்ற சர்வதேச போலீஸ் அமைப்புகள் மூலம் உதவியை நாட வேண்டும். ஆகவே பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்த பணத்தை கயவர்கள் கைகளில் எளிதாக சேர்வதற்கு உதவி செய்ய கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.