யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் ஏற்காடு கோடை விழா துவங்கியது

ஏற்காடு, மே 24 : சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 37வது ஏற்காடு கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர்கண்காட்சி இன்று துவங்கியது. அமைச்சர்கள் வேளாண்மை துறை அமைச்சர் தாமோதரன், சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:26 am

தங்கராஜா

ஏற்காடு, மே 24 : சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 37வது ஏற்காடு கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர்கண்காட்சி இன்று துவங்கியது. அமைச்சர்கள் வேளாண்மை துறை அமைச்சர் தாமோதரன், சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுலேந்திரா, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மலர் கண்காட்சியை அமைச்சர் தாமோதரன் துவக்கி வைத்தார்.

இந்த மலர் கண்காட்சி 4 நாட்கள் நடைபெறும். கண்காட்சியில் சுமார் 40,000 மலர் தொட்டிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பல வகையான வண்ண மலர்களைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். விழாவையொட்டி பொதுமக்கள் பங்கேற்கும் படகுப்போட்டி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.