கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எஸ்.ஐ கொலை வழக்கு: பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே போலீஸ் எஸ்.ஐ கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் பள்ளி மாணவர்கள் 6 பேர் மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News image
Updated On :4 நவம்பர் 2012, 3:03 pm

யுகன்

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே போலீஸ் எஸ்.ஐ கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் பள்ளி மாணவர்கள் 6 பேர் மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுவரை இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 27 ந் தேதி திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் எதிரிகளை பிடிக்க முயன்றபோது திருப்பாச்சேத்தி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ ஆல்வின் சுதன் வன்முறைக் கும்பலால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். கொலையாளிகளைப் பிடிக்க டி.எஸ்.பி மங்களேஸ்வரன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டதாகக் கூறப்படும் வேம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனியான்டி மகன் வடிவேல்(16), சீமைச்சாமி மகன் சிங்கமுத்து(17), சுப்ரமணி மகன் முத்துப்பாண்டி(16), சுப்ரமணியன் மகன் ராஜகுரு(19) செல்லப்பாண்டி மகன் ஜோதிபாசு(17), விஸ்வநாதன் மகன் விஜய்(17) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் அருகே வண்ணான்காடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சக்திவேல்(25), அரியலூர் மாவட்டம் நாகபந்தலைச் சேர்ந்த கொளஞ்சி மகன் மதியழகன்(25) ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மானாமதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.