தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தருமபுரி அருகே 3 கிராமங்களில் தீயிட்டு எரிப்பு: 90 பேர் கைது

தருமபுரி அருகே நேற்று இரவு  3 கிராமங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதற்கான பின்னணியில், காதல் திருமணம் ஒன்று இருந்துள்ளது. பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டதை அடுத்து

News image
Updated On :8 நவம்பர் 2012, 6:20 am

முருகன்

தருமபுரி அருகே நேற்று இரவு  3 கிராமங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதற்கான பின்னணியில், காதல் திருமணம் ஒன்று இருந்துள்ளது. பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, கோபமடைந்த அந்தப் பெண்ணைச் சேர்ந்த சமூகத்தினர், அந்த இளைஞரின் சமூகத்தைச் சேர்ந்த கிரமத்தில் புகுந்து, வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

தருமபுரி அருகில் உள்ள நாயக்கன்கொட்டாய், நத்தம்காலனி, கொண்டாம்பட்டி அண்ணாநகர் ஆகிய 3 கிராமங்களில் தீவைக்கப்பட்டுள்ளது. இதில், 140 வீடுகளில் தீ வைக்கப்பட்டதில், 30 வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாயின.

இதனிடையே இந்தக் கிராமங்களூக்குள் புகுந்தவர்கள், அங்கிருந்த பெண்களிடம் இருந்து நகைகளைப் பறித்து, பணம் உள்ளிட்டவற்றையும் கொள்ளை அடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுந்தரமூர்த்தி, தருமபுரி எஸ்பி அஸ்ரா கர்க், டிஐஜி  சஞ்சய்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 218 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் லில்லி வருவாய் அலுவலர் ஆகியோர் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு,  உடைகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் அங்கே நிறுத்தப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள், 60 டூவீலர்கள்  உள்ளிட்டவையும் சேதம் அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.