பைக் சைலன்ஸர் மீது பட்டாசு பட்டு வெடித்தது: 3 பேர் காயம்
நாகப்பட்டினம் அருகே இரு சக்கர வாகனத்தில் பட்டாசுகளை வாங்கி பெட்டியில் கட்டி வைத்து எடுத்துச் சென்றபோது, வண்டியின் சைலன்ஸரில் பட்டு, வெப்பத்தால் பட்டாசுகள் வெடித்து 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.









