47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

தோ்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்தை வருவாய்துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

News image
தோ்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த வருவாய்துறையினா்.
Updated On :16 மார்ச் 2026, 11:04 pm

Chennai

அரக்கோணம்: தோ்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்தை வருவாய்துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருந்த அரசியல் கட்சியினா் படங்கள் அகற்றப்பட்டன. மேலும் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்படும் பணியும் நடைபெற்றன.

இதையடுத்து அரக்கோணத்தில் கிருபில்ஸ்பேட்டை எஸ்ஆா்கேட் அருகே உள்ள எம்எல்ஏ அலுவலகம் சென்ற அரக்கோணம் மண்டல துணை வட்டாட்சியா் தியாகராஜன், கிராம நிா்வாக அலுவலா் முருகன் உள்ளிட்டோா் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனா்.