கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிவகங்கையில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் படுகொலை: பதற்றம்

சிவகங்கையில் அதிமுகம் பிரமுகர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஸ்கள் ஓடவில்லை.

News image
Updated On :15 நவம்பர் 2012, 7:15 am

யுகன்

சிவகங்கையில் அதிமுகம் பிரமுகர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஸ்கள் ஓடவில்லை.

சிவகங்கையில் அதிமுகவின் மாவட்ட மாணவர் அணிச் செயலர் கதிரேசன்(வயது 42). இவர் சிவகங்கையில் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரசன்னா (வயது 14), மகள் நிகிலா (வயது 11).

கதிரேசனின் சொந்த ஊர் சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணனூர். நேற்று அவர் தனது ஊருக்குச் சென்றுவிட்டு, இரவு சுமார் 10.30 மணி அளவில் காரில் சிவகங்கை திரும்பிக் கொண்டிருந்தார். காரை பூமிநாதன் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார்.

இவர்கள் வந்த கார் சிவகங்கை அருகே செங்குளம் கிராமத்தின் அருகே வந்தபோது, ஒரு லாரியில் வந்த கும்பல் காரை மடக்கியது. கத்தி, வாள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காரைத் தாக்கிய அந்த கும்பல், காரில் இருந்தவர்களை கொலைவெறியுடன் தாக்கியது.

இதில், பிரசன்னா, பூமிநாதன் இருவரும் சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் நிகிலா உயிரிழந்து விட்டதாக எண்ணிய கும்பல் அங்கிருந்து பின்னர் தப்பி ஓடியது.

அருகில் இருந்தவர்கள் நிகிலாவை மட்டும் காப்பாற்றி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தப் பிரச்னையால் சிவகங்கையில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. சிவகங்கை அரசு பொதுமருத்துவமனை முன்னர் கதிரேசனின் ஆதரவாளர்கள், ஊர் மக்கள் குவிந்தனர். இதனால் அங்கே முன்னெச்சரிக்கையாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.