இந் நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் டி.ஐ.ஜி ஸ்ரீதர், எஸ்.பி ராஜேஸ்வரி சிவகங்கையில் முகாமிட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கூலிப்படையினர் பயன்படுத்திய லாரி மற்றும் பைக் ஆகியவை போலீசிடம் சிக்கியுள்ளன. இதில் லாரி மானாமதுரை பகுதியைச் சேர்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.ஜி.பி நரேந்திரபால்சிங், ஐ.ஜி மஞ்சுநாதா ஆகியோர் சென்னையிலிருந்து சிவகங்கை வந்து கொலை வழக்கு தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்தினர். இவர்கள் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.