ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.9.8 லட்சம், 158 கிராம் தங்கம் வசூல்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ.9.8 லட்சமும், 158 கிராம் தங்கம், 139 கிராம் வெள்ளி, 1 அமெரிக்க டாலர் வசூல் ஆனது தெரியவந்துள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2012, 3:07 pm

ஜபலின் ஜான்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ.9.8 லட்சமும், 158 கிராம் தங்கம், 139 கிராம் வெள்ளி, 1 அமெரிக்க டாலர் வசூல் ஆனது தெரியவந்துள்ளது.
 ஈரோட்டில் உள்ள பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் உண்டியல்கள் ஜூன் மாதம் கடைசியாக எண்ணப்பட்டன. அப்போது ரூ.10 லட்சத்து 49 ஆயிரத்து 645 வசூல் ஆனது தெரியவந்தது.
 இந்நிலையில், இந்த 3 கோவில்களின் உண்டியல்களும் வியாழக்கிழமை திறக்கப்பட்டு அதை எண்ணும் பணி தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் விஸ்வமூர்த்தி (ஈரோடு), ஆனந்த் (திருப்பூர்), கோவில் செயல் அலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
 பெரிய மாரியம்மன் கோவிலில் 6 உண்டியல்கள், சின்னமாரியம்மன் கோவிலில் 2 உண்டியல்கள், வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் 1 உண்டியல் என மொத்தம் 9 உண்டியல்கள் எண்ணப்பட்டன.
 தங்கம், வெள்ளி, ரூபாய் நோட்டுகள், நாணயங்களை செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிணர். உண்டியல் எண்ணும் பணி விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
 இந்த உண்டியலில் மொத்தம் ரூ.9 லட்சத்து 81 ஆயிரத்து 331 ரொக்கம், 158 கிராம் தங்கம், 139 கிராம் வெள்ளி, 1 அமெரிக்கன் டாலர் ஆகியவை வசூலானது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.