திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூர் அருகே இருக்கன்குடி எல்லையில் பதற்றம்: போலிஸ் குவிப்பு

சாத்தூர் அருகே இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி கிராம மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, நத்தத்துப்பட்டி கிராம மக்கள் சாலை மறியலிலி ஈடுபட்டனர்.

Updated On :4 அக்டோபர் 2012, 11:51 am

சாத்தூர் அருகே இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி கிராம மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, நத்தத்துப்பட்டி கிராம மக்கள் சாலை மறியலிலி ஈடுபட்டனர்.

சாத்தூரை அடுத்த இருக்கன்குடி பஞ்சாயத்துக்கும், நத்தத்ததுப்பட்டி பஞ்சாயத்துக்கும் 5 வருடங்களாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது, 8ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், 2009ம் ஆண்டு வரை இருக்கன்குடி கோயில் ஊழியர்கள் தொழில் வரி செலுத்தி வந்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், 2010-2011, 2011-2012ம் ஆண்டுக்கான தொழில் வரி செலுத்தப்படவில்லை. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குநர், நிலுவைத் தொகை வரிகளை சரியாக செலுத்தி வர வேண்டும் என்று உத்தரவிட்டார். இருக்கன்குடிக்கு உட்பட்ட பஞ்சாயத்து கோயில் ஊழியர்கள், 17,760 ரூபாயை தொழில்வரியாக செலுத்தினர்.

இதையறிந்த நத்தத்துப்பட்டி கிராம மக்கள் நத்தத்துப்பட்டி - இருக்கன்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த சாத்தூர் தாசில்தார் மைக்கேல் ராஜ், சாத்தூர் டிஎஸ்பி சின்னையா மற்றும் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நத்தத்துப்பட்டி ஊராட்சித் தலைவர் மற்றும் இருக்கன்குடி ஊராட்சித் தலைவர், இருக்கன் குடி கோயில் நிர்வாகியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையறிந்த இருக்கன்குடி கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நத்தத்துப்பட்டி பஞ்சாயத்து தலைவரை தாக்க முயற்சித்தனர். போலிஸார் அதனை தடுத்து நிறுத்தி அவரை நத்தத்துப்பட்டிக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது இருக்கன் குடி கிராமத்தினர் போலிஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, போலிஸார், இருக்கன்குடி கிராம மக்கள் மீது தடியடி நடத்தினர். இதில், சாத்தூர் காவல்துறை ஆய்வாளர், மணிவண்ணன், ஜீப் ஓட்டுநர் ராஜநாராயணன் உட்பட இருக்கன்குடி பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சாத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் மேலும் வன்முறை ஏற்படாத வண்ணம் பாதுகாக்க, விருதுநகர் மாவட்ட எஸ்.பி. நஜ்மல் கோதா மற்றும் சாத்தூர் டிஎஸ்பி சின்னையா, தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலிஸார் இருக்கன்குடி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, நன்மேனி, ஓ. மேட்டுப்பட்டி உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.