மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு கல்லூரி மாணவர் பிடிப்பட்டனர்.

சென்னை வளசரவாக்கம் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை பிடிபட்டனர்.

Updated On :27 அக்டோபர் 2012, 3:50 pm

சென்னை வளசரவாக்கம் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை பிடிபட்டனர்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

 ஆழ்வார்திருநகர் இந்திரா தெருவைச் சேர்ந்த முத்துசாமி மனைவி தங்கம் (48).  இவர் சனிக்கிழமை காலை தனது வீட்டு அருகே நடந்து வந்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம் நபர்கள், தங்கத்தின் கழுத்தில் கிடந்த ரூ.1.44 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

 இதைப் பார்த்த அப் பகுதி மக்கள் அவர்கள் இருவரையும் பிடித்தனர். அப்போது இருவரும், தாங்கள் வைத்திருந்த தங்கச் சங்கிலியை அங்கிருந்த புதருக்குள் போட முயன்றனராம். இதை பார்த்த பொதுமக்கள் தங்கச் சங்கிலியுடன் இருவரையும்,  அங்கு ரோந்து வந்த வளசரவாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் ஒப்படைத்தனர்.

  இதைத் தொடர்ந்து முருகேசன் அவர்கள் இருவரையும் கைது செய்து, வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு போலீஸôர் அவர்கள் இருவரிடமும் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ லாரன்ஸ் (18), முகம்மது யூசுப் (18) என்பது தெரியவந்தது.

  மேலும் அவர்கள் அமைந்தகரையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் பி.சி.ஏ. முதலாமாண்டு படித்து வருவது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே 5 வழிப்பறி வழக்குகள் சென்னையில் உள்ளதையும் போலீஸôர் விசாரணையின்போது கண்டறிந்தனர்.

 இதையடுத்து இருவர் மீதும் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.