விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவிலி.யில் தலைவர்கள் படங்களுக்கு அவமரியாதை: பதற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு தலைவர்களின் படங்கள் திங்கள்கிழமை அவமரியாதை செய்யப்பட்டதையடுத்து, இ

Updated On :29 அக்டோபர் 2012, 3:26 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு தலைவர்களின் படங்கள் திங்கள்கிழமை அவமரியாதை செய்யப்பட்டதையடுத்து, இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் இங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி விலக்கில் மாஞ்சோலை ஆட்டோ தொழிலாளர் சங்கம் என்ற பெயர் பலகையுடன் ஆட்டோ நிலையம் உள்ளது. இந்த போர்டில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் படம் உண்டு. திங்கள்கிழமை கொத்தங்குளத்தைச் சேர்ந்த சிலர் தேவர் குருபூஜைக்கான டிஜிட்டல் போர்டு வைக்க வந்த போது ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள பெயர் பலகையில் செருப்பை கட்டி போட்டு விட்டார்களாம். இது குறித்து ஆட்டோ ஸ்டாண்டு தலைவர் ரஜினி வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவர் குருபூஜைக்காக நகர் முழுவதும் எவ்வித அனுமதியும் இன்றி பொது மக்களுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் முக்குலத்தேவர் புலிப்படை என்ற பெயரில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது. ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த போர்டில் யாரோ செருப்புகளை போட்டுச் சென்று விட்டார்களாம். இது குறித்து சந்தனக்குமார் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இச் சம்பவங்களை அடுத்து நகரில் பல்வேறு பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.