பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நீதிபதிக்கும், காவல்துறை ஆய்வாளருக்கும் மோதல் : ஆய்வாளர் சிறைபிடிப்பு

கடலூர், செப்., 04 : கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், கடலூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி புகழேந்திக்கும், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வளர் கார்த்திகேயனுக்கும் இடையே இன்று ஏற்பட்ட வாக்குவாதம் மு

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:12 am

சீனிவாசன்

கடலூர், செப்., 04 : கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், கடலூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி புகழேந்திக்கும், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வளர் கார்த்திகேயனுக்கும் இடையே இன்று ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை ஆய்வாளரை நீதிமன்றத்தில் சிறைவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்பாக வந்த ஆய்வாளர் கார்த்திகேயனுக்கும், நீதிபதி புகழேந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தள்ளியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கார்த்திகேயனை சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர், குற்றவியல் நடுவர் நீதிபதியிடமும், முதன்மை நீதிபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து ஆய்வாளர் கார்த்திகேயனை நீதிமன்ற ஊழியர்கள் விடுவித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.