கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிவகங்கை அருகே கல்லூரி மாணவி தற்கொலை- ஆசிரியை மீது வழக்கு

சிவகங்கை,செப்.5: சிவகங்கை அருகே கல்லூரியில் ஆசிரியை திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக இவரது தந்தை போலீசில் புகார் செய்ததையடுத்து ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:13 am

யுகன்

சிவகங்கை,செப்.5: சிவகங்கை அருகே கல்லூரியில் ஆசிரியை திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக இவரது தந்தை போலீசில் புகார் செய்ததையடுத்து ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 
சிவகங்கை அருகே தச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் இவர் செம்பனூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவரது மகள் ஆனந்தஜோதி(19) சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந் நிலையில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய ஆனந்தஜோதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கதிரேசன் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கல்லூரியில் வகுப்பு ஆசிரியை ஹேமமாலினி மகள் ஆனந்தஜோதியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஹோமமாலினி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.