தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குரூப் 2: கைதான ஆந்திர நபரை 15 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க கோரிக்கை

ஈரோடு, செப்.6: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த ராவ் என்பவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:14 am

ஜபலின் ஜான்

ஈரோடு, செப்.6: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த ராவ் என்பவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரினர்.

ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் 2ல் இன்று மாலை ஆனந்த ராவை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் எடுக்க போலீஸார் அனுமதி கோரினர். இது குறித்த முடிவு நாளைதான் தெரியவரும் என்று போலீஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட ஆனந்த ராவ், ஒரிசா ரயில்வே பணிமனையில் ஃபிட்டர் பணியில் இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர்.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளைத் தேடுவதை அறிந்த ஆனந்த ராவ், ஒரிசா மாநிலத்தில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, ஆந்திராவில் விசாகப்பட்டினத்துக்கு வந்துள்ளார். அங்கே சில நாட்களாக, செல்போனுக்கு பல்வேறு சிம் கார்டுகளை வாங்கிக் கொண்டு, சிம் கார்டுகளை மாற்றிக்கொண்டே பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், அவரை விசாகப்பட்டினம் போலீஸார் கைது செய்தனர். தகவல் அறிந்து சென்ற தமிழக போலீஸார், விசாகப் பட்டினம் மெட்ரோ நீதிமன்றத்தில் டிரான்சிட் வாரண்ட் பெற்று, ஆனந்த ராவை அழைத்து வந்தனர். பின்னர் இன்று மாலை ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.