பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாணவனிடம் லஞ்சம்: கல்வித் துறை தினக்கூலி பெண் ஊழியர் கைது.

கடலூர்,செப்.7: மதிப்பெண் பட்டியல் வழங்க மாணவனிடம் ரூ.600 பெற்ற கல்வித்துறை தினக்கூலி பெண் ஊழியர் கண்ணகியை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் அ

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:16 am

சீனிவாசன்

கடலூர்,செப்.7: மதிப்பெண் பட்டியல் வழங்க மாணவனிடம் ரூ.600 பெற்ற கல்வித்துறை தினக்கூலி பெண் ஊழியர் கண்ணகியை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் அரசு தேர்வுத் துறை மண்டல இயக்குநரகம் இயங்கி வருகிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படும் இவ்வலுவலகத்தில், அரசு தேர்வு எழுதும் தனித்தேர்வளர்களுக்கு தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த அலுவலகத்தில் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த கண்ணகி கடந்த 16 வருடங்களாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பண்ருட்டி வட்டம் வீரசிங்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த சிவசக்தி(32), கடந்த 2010-ஆம் ஆண்டில் நடந்த 10-வது அரசு பொது தேர்வில் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் வேலை பெற 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டதால், கடந்த 4-ஆம் தேதி கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் இயங்கும் அரசு தேர்வு துறை மண்டல இயக்குநரகத்திற்கு சென்று மதிப்பெண் பட்டியல் பெற் சென்றுள்ளார்.
அப்பணியை செய்து வந்த கண்ணகி ரூ.ஆயிரம் கொடுத்தால் மதிப்பெண் பட்டியலை தேடி எடுத்துத் தருவதாக கூறியுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.600-க்கு முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவசக்தி கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில்  புகார் செய்தார். வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு காவல் துறை இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான குழுவினர் சிவசக்தியிடம் ரூ.600 கொடுத்து அனுப்பி அலுவலக வளாகத்தில் இருந்தனர். 
அப்போது சிவசக்தியிடம் ரூ.600-ஐ பெற்ற கண்ணகியை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகியுள்ள கண்ணகி ஓரிரு வாரத்தில் நிரந்தரப் பணியாளராக ஆகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.