விஜயராஜா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: நிலத் தரகர்கள் சங்கம் கோரிக்கை
சேலம், செப். 23: இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜாவின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று நிலத்தரகர்கள் சங
சேலம், செப். 23: இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜாவின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று நிலத்தரகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிலத்தரகர்கள் சங்கத்தின் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சி.அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் எம்.மாதையன் வரவேற்றார்.
கூட்டத்தில், நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வால் தமிழகத்தில் சுமார் 10 லட்சம் நிலத்தரகர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே அரசின் வழிகாட்டி மதிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள இடங்களுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து ஆய்வு செய்து வழிகாட்டி மதிப்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நதி நீர் பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழக விவசாயிகளுக்கு விரோதமாகவும் நடந்து கொள்ளும் கர்நாடக அரசு மீது பிரதமர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் தீக்குளித்து உயிரிழந்த சேலம் இளைஞர் விஜயராஜாவின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் மாவட்ட நிலத்தரகர்கள் சங்கத் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், செயலர் எம்.கமால் பாஷா, விழுப்புரம் மாவட்டத் தலைவர் சி.குமார், செயலர் டி.முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.