சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

யாரையும் குறிவைத்து சோதனை நடத்தப்படவில்லை : சிபிஐ விளக்கம்

ஸ்டாலின் வீட்டில் இன்று சோதனை செய்தது, வழக்கு விசாரணையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமே, இதில் தனிப்பட்ட யாரையும் குறிவைத்து செய்யவில்லை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

Updated On :21 மார்ச் 2013, 9:41 am

ஸ்டாலின் வீட்டில் இன்று சோதனை செய்தது, வழக்கு விசாரணையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமே, இதில் தனிப்பட்ட யாரையும் குறிவைத்து செய்யவில்லை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில், திமுக பொருளாளர் ஸ்டாலினின் வீடு உள்ளிட்ட 19 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம் என்று பல்வேறு தரப்பினர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளில், சோதனையை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கம் அளித்த சிபிஐ, சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றவியல், மோசடி, ஏமாற்றுதல், சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த 17 பேரின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.இதில் 17 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது வழக்கின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனை தானேத் தவிர, எந்த ஒரு தனி நபரையும் குறி வைத்து நடத்தப்பட்ட சோதனை அல்ல. இதில் யாரது தலையீடும் இருக்கவில்லை என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.