காசோலை மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், தான் வாங்கியிருந்த கடன் தொகை ரூ.2 லட்சத்தை திங்கள்கிழமை வட்டியுடன் அவர் திருப்பியளித்தார். இதையடுத்து, கடன் கொடுத்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.
இவர் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் பொன்னுசாமியிடம் 2008-ஆம் ஆண்டு ரூ.2 லட்சம் கடன் பெற்றாராம் அந்தப் பணத்துக்காக 2009-ஆம் ஆண்டு, தொடக்கத்தில் காசோலை அளித்தாராம்.
பவர் ஸ்டார் சீனிவாசன் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் அந்தக் காசோலை திரும்பியது.
இதையடுத்து, பொன்னுசாமியின் மேலாளர் வெங்கடாசலம் பவர் ஆஃப் அட்டர்னி பெற்று நாமக்கல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், 2009ஆம் ஆண்டு இறுதியில் சீனிவாசனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பிறகு அவர் தலைமறைவானார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சீனிவாசனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஜோதி உத்தரவு பிறப்பித்தார். இதனடிப்படையில், நாமக்கல் போலீஸார் அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சீனிவாசனின் வழக்குரைஞர் ரூ. 2 லட்சம் தொகையை வட்டியுடன் பொன்னுசாமியிடம் திங்கள்கிழமை திருப்பியளித்தார்.
இதையடுத்து பொன்னுசாமி தரப்பில் வெங்கடாசலம் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அவரது வழக்குரைஞர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



