இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

6வது ஐ.பி.எல் கிரிக்கெட்: தில்லி அணி அபார வெற்றி

6வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் தில்லி அணியுடன்‌, மும்பை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.அணியில் அதிகபட்சமாக சச்சின் 54 ரன்கள் எடுத்தார்.

Updated On :21 ஏப்ரல் 2013, 2:12 pm

6வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் தில்லி அணியுடன்‌, மும்பை அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.அணியில் அதிகபட்சமாக சச்சின் 54 ரன்கள் எடுத்தார்.இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தில்லி அணி 17.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தில்லி அணி சார்பில் சேவாக் அதிரடியாக  விளையாடி 57 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 6 தொடர் தோல்விகளுக்குப் பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முதல் வெற்றி இது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.