சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

இந்திய-சீன உறவு பாதிக்காத வகையில் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பிரகாஷ் காரத்

இந்திய-சீன உறவு பாதிக்காத வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று பிரகாஷ்காரத்

News image
Updated On :1 மே 2013, 1:20 pm

இந்திய-சீன உறவு பாதிக்காத வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று பிரகாஷ்காரத் தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனிகுமார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் மத்திய புலனாய்வுத்துறை(சிபிஐ) தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்தை தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் அஸ்வனிகுமார் பதவிவிலக வேண்டும். அஸ்வனிகுமாரை ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டை பிரதமர் எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை பிரதமரிடம் நாடு எதிர்ப்பார்க்கிறது.

இந்திய-சீன எல்லையில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனப்படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாக பிரச்னை எழுந்துள்ளது. எல்லை சிக்கலை தீர்த்து கொள்வதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதோடு, செயல்திட்டத்தையும் உருவாக்கியுள்ளன. கட்டுப்பாட்டு எல்லை, இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி எல்லை இல்லை. ஊடகங்கள் வர்ணிப்பது போல இது மிகப் பெரிய சிக்கலும் இல்லை. இது நீண்டகாலமாக நிலவும் பிரச்னை. எனினும், கடந்த 50 ஆண்டுகளாக சீனாவுடன் இந்தியா நல்லுறவை பேணி பாதுகாத்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு நீடிக்கிறது. அடுத்தவாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா செல்லும்போது பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம். ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் அல்லாமல் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.