மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தில்லியில் போராட்டம் நடத்த யாசின் மாலிக்குக்கு அனுமதி மறுப்பு

தில்லியில் போராட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி யாசின் மாலிக்குக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது.

Updated On :2 மே 2013, 11:00 am IST

தில்லியில் போராட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி யாசின் மாலிக்குக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது.

அப்சல் குருவின் உடலை குடும்பத்திடம் ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புது தில்லியில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் தில்லி காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பாதுகாப்பு அமைப்பு அளித்த பரிந்துரையின்படி, இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் தில்லியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.