/

சென்னையில் தொழில் அதிபர் தற்கொலை : குடும்பத்தாரும் மரணம்

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த தொழில் அதிபர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தாரும் மரணம் அடைந்துள்ளனர்.

Updated On :21 மே 2013, 5:18 am

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த தொழில் அதிபர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தாரும் மரணம் அடைந்துள்ளனர்.

சென்னை நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் இன்று காலை ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, அவரது வீட்டில் மனைவி சித்ரா, மகள் தாமரை ஆகியோர் இறந்து கிடந்தனர். இவர்களது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

மூவரது உடல்களையும் கைப்பற்றியுள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.