/

இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா திட்டம்: முலாயம் சிங் எச்சரிக்கை

இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருகிறேன். ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. என்ன விலை கொடுத்தாவது இந்தியாவின்

News image
Updated On :1 ஜூன் 2013, 7:50 pm IST

இமாசலப் பிரதேசம் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்தியாவின் பெருமளவிலான நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. எனவே, சீன விஷயத்தில் மத்திய அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.

தில்லயில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முலாயம சிங் பேசியதாவது:÷ இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருகிறேன். ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. என்ன விலை கொடுத்தாவது இந்தியாவின் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சீனா விரும்புகிறது. லடாக்கிலிருந்து இப்போதைக்கு தனது ஊடுருவலை சீனா திரும்பப் பெற்றுள்ளது. அந்நாடு தொடர்பாக மத்திய அரசு தவறான கருத்தை கொண்டிருக்க கூடாது.

இமாசலப் பிரதேசம் முதல் வடக்கு கிழக்கு மாநிலங்கள் வரை பெரும்பகுதி நிலங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா திட்டமிட்டுள்ளது.சீனாவின் வரைபடத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான 7 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அருணாசலப் பிரதேச மாநிலம் தனக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அப்பகுதியினர் சீனாவுக்கு வருவதற்கு விசா பெறத் தேவையில்லையென்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை விட சீனாதான் நமது மிகப்பெரிய எதிரி. எனவே, சீனாவுக்கு எதிராக கடுமையான நிலையை இந்தியா எடுக்க வேண்டும்'' என்றார் முலாயம் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.