கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் அதிகபட்சமாக இரணியல் பகுதியில் 142 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த மழை அளவு விவரம் வருமாறு:
பேச்சிப்பாறை அணையில் 58.6 மி.மீ. மழையும், பெருஞ்சாணி அணையில் 32.8 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 464 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதுபோல் பெருஞ்சாணி அணைக்கு 71 கன அடி தண்ணீரும், சிற்றாறு-1 அணைக்கு 26 கன அடியும், சிற்றாறு-2 அணைக்கு 42 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.இந்த மாவட்டத்தில் குருந்தன்கோடு 25.2 மி.மீ., அடையாமடை 52 மி.மீ., கோழிப்போர்விளை 35 மி.மீ., புத்தன் அணை 32.6 மி.மீ., திற்பரப்பு 53 மி.மீ., நாகர்கோவில் 20 மி.மீ., பூதப்பாண்டி 20 மி.மீ., சுருளோடு 36 மி.மீ., ஆணைக்கிடங்கு 23 மி.மீ., பாலமோர் 46 மி.மீ., மயிலாடி 13.4 மி.மீ., கொட்டாரம் 4.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் இன்று காலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழையில் அணைகள், குளங்கள் ஓரளவுக்கு நிரம்பினால்தான் கன்னிப்பூ சாகுபடியைத் தொடங்க முடியும் என்கின்றனர் விவசாயிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு கூட்டாளி முதல்வர் தேவை! ராகுல் பேச்சு

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்: அண்ணாமலை விளக்கம்
100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

