திருவொற்றியூரில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து மு.க.ஸ்டாலின் நற்சேவை மையத்தின் தலைவர் ஆதி குருசாமி கூறியதாவது:-
சேவை மையத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள இவ்வேலைவாய்ப்பு முகாம் திருவொற்றியூர் கிளாஸ் பேக்டரி சாலையில் (அண்ணாமலைநகர் ரயில்வே கேட் அருகே) உள்ள அனைத்து வியாபாரிகள் சங்க அலுவலக வளாகத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பெப்சி, யுனிவர்சல், எம்.டி.எஸ், ஐடியா, யுனிவர்சல், டி.எச்.எல். கூரியர்ஸ், வில்ஸ் லைப்ஸ்டைல், ஸ்மித், கோத்ரெஜ், பரான் ஜூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்ய உள்ளன. இதில் எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் டூ, டிப்ளமோ படித்தவர்கள் அனைவரும் இம்முகாமில் பங்கு பெறலாம். சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என நிறுவனங்கள் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கயல் சந்திரனின் சிங்கா பட டீசர்!

ஹாய் நான்னா இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு கூட்டாளி முதல்வர் தேவை! ராகுல் பேச்சு

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

