/

ரஜினி உடல் நிலை குறித்து வதந்தி: என் பெயரை பயன்படுத்தி மோசடி: விடிவி கணேஷ்

நடிகர் விடிவி கணேஷ் பெயரில்  நேற்று மாலை ஒரு ட்விட் வெளியானது. அதில் ரஜினிக்கு மாரடைப்பு, மருத்துவமனையில் அனுமதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விசாரிக்க ஆரம்பித்தனர். பின்னர் இது முற்றிலும் பொய்யான தகவல் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த

News image
Updated On :1 ஜூன் 2013, 4:33 pm IST

ரஜினி உடல் நிலை குறித்து தன் பெயரில் வெளியான ட்வீட் பொய்யானது என்று நடிகர் விடிவி கணேஷ் கூறியுள்ளார்.

நடிகர் விடிவி கணேஷ் பெயரில்  நேற்று மாலை ஒரு ட்விட் வெளியானது. அதில் ரஜினிக்கு மாரடைப்பு, மருத்துவமனையில் அனுமதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விசாரிக்க ஆரம்பித்தனர். பின்னர் இது முற்றிலும் பொய்யான தகவல் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த ட்வீட்டை தான் அனுப்பவில்லை என்றும், தன் பெயரைப் பயன்படுத்தி சிலர் இந்த மோசடியைச் செய்துள்ளனர், மேலும் தான் ட்விட்டரில் இல்லவே இல்லை என்றும் விடிவி கணேஷ் கூறியுள்ளார். இது குறித்து விரைவில் சைபர் க்ரைம் பிரிவில் இதுகுறித்து புகார் தரவிருப்பதாகவும் கூறியுள்ளார் ஆனால் விடிவி கணேஷ் என்ற பெயரில் இயங்கும் இந்த கணக்கு கடந்த ஆண்டிலிருந்தே செயல்பாட்டில் உள்ளது. சிம்பு போன்றவர்கள் அதைத் தொடர்வதும் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.