காவிரி நதிநீர் பங்கீடு குறித்து முடிவெடுக்க புது தில்லியில் இன்று கூடிய தற்காலிக காவிரி கண்காணிப்புக் குழுவில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைச் செயலாளர், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து ஜூன் மாதத் தேவைக்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்த கர்நாடக தலைமைச் செயலாளர், கர்நாடகத்தில் இன்னும் பருவ மழை துவங்கவேயில்லை. அதில்லாமல், கர்நாடகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இது குறித்து கலந்தாலோசனை நடத்தி, முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். இன்னும் புதிய அரசு பணிகளைத் துவங்கவில்லை. எனவே காவிரியில் தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட தற்காலிகக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத் துறை செயலாளருமான எஸ்.கே. சர்க்கார், எடுக்க வேண்டிய முடிவு குறித்து ஆலோசித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



