கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரைக்கு மேல் பகுதியில் 7 இடங்களிலும், கீழ் பகுதியில் 3 இடங்களிலும் மழை நீரை தேக்க கதவணைகள் கட்ட வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில்- கடலூர் வரை இரு சக்கர வாகன பேரணி நடத்துவது என விவசாயிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோயில் ஏ.கே.மஹாலில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எஸ்.வைத்தியநாதசாமி தலைமை வகித்தார். கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் காந்தன், எம்.அன்பழகன், குணவாசல் எஸ்.கவிசந்திரன், அத்திப்பட்டு மதிவாணன், ஆயங்குடி அப்துல்வதூது, ஜே.வெங்கடாஜலபதி, கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நலிவுற்றுள்ள விவசாயத்தை காப்பாற்ற நெய்வேலி மின்சாரத்தை விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரமாக இலவசமாக வழங்க வேண்டும்; காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு தற்காலிக ஆணையமாக அமைக்கு இருப்பதால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் ஏற்படாது, எனவே நிரந்திர காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; கர்நாடக முதல்வர் கர்நாடக அணையில் நீர் நிரம்பி வழிந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும் எனக்கூறுவது உச்சநீதிமன்ற தீர்ப்பையே மீறி நடக்கும் செயலாகும். எனவே கர்நாடக முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க தமிழகஅரசை கேட்டுக் கொள்வது; வீராணம்ஏரி தூர் வாருவது, பாசன வாய்க்கால் தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை காலம் கடத்தும் சிதம்பரம் பொதுப்பணித்துறையை (கொள்ளிட வடிநில கோட்டம்) வன்மையாக கண்டிக்கிறோம், கொள்ளிடம் கீழணையும், ஸ்ரீரங்கத்தில் மேலணையும் கட்டிய ஆங்கிலேயே பொறியாளர் சர்ஆர்தர் காட்டனுக்கு அணைக்கரையில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமயம் சாா்-பதிவாளரகத்தில் ரூ. 40 ஆயிரம் பறிமுதல்

எஃப்ஏடிஎஃப் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் நாடுகள்: ஐ.நா.வில் இந்தியா சாடல்

தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்

பொய்கை சந்தை கால்நடை வா்த்தகம் அதிகரிப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


