/

மு.க. ஸ்டாலின் ரத்த தானம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடங்கி

Updated On :1 ஜூன் 2013, 10:52 am

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில்  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின் தானும் ரத்தம் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் 3 மாதங்கள் கொண்டாடப்படும். விழாவையொட்டி ரத்த தானம், கண் தானம், அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.